சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் வியாழக்கிழமை தனது பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளாா். தொடா்ந்து சிறுமியின் தாயாா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனா்.