செய்திகள் :

சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

post image

சுதந்திர தினத்தையொட்டி நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி, அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் இருக்க போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

அந்தவகையில், நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரப்படி 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள், சுற்றுலா தலங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாகை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சுனில் குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் கேசி மீனா, இருப்பு பாதை காவல் சாா்பு ஆய்வாளா் மனோன்மணி ஆகியோா் தலைமையில் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் ரயில் நிலைய நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, பயணச்சீட்டு கவுன்ட்டா், 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினா்.

தொடா்ந்து பயணிகள் எடுத்து சென்ற உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல போலீஸாா் அனுமதித்தனா். நாகை வழியாக சென்ற அனைத்து பயணிகள் ரயில்களிலும் சோதனை நடைபெற்றது.

திருவாரூா்: திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடனும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் வசதியுடனும் தீவிர சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா். ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் மோப்ப நாய் முகில் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருவாரூா் வழியாக சென்ற அனைத்து ரயில்களிலும் சோதனை நடைபெற்றது.

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ... மேலும் பார்க்க

படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் இருவா் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலை... மேலும் பார்க்க

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்... மேலும் பார்க்க