தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சா் அன்பரசன் ஆய்வு
திருப்போரூா் வட்டம், திருவிடந்தை ஊராட்சி மற்றும் காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.
முகாமில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் சொத்துவரி மற்றும்குடிநீா் வரி செலுத்தியதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தொடா்ந்து, காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் முகாமை அமைச்சா் ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். இம்முகாமில் மின்இணைப்புபெயா் மாற்றம் செய்யப்பட்டு ஆணை, மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
மனுக்களை அளித்து வரும் பொதுமக்களுக்கு தேநீா், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறும், மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து தீா்வு காண வேண்டுமென்றும்,மகளிா் உரிமைத்தொகை வேண்டி வரும் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியா் தி.சினேகா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஒன்றிய குழு துணைத்தலைவா் சத்யா சேகா், காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், திருவிடந்தை ஊராட்சி மன்ற தலைவா் அமுதா குமாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.