செய்திகள் :

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

post image

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு என்பது சர்வாதிகார உச்சநிலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

கழகம் இணைய வேண்டும் என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதில் இருக்கிறது.

தலைவர் மீதும் அம்மா மீதும் கழகத்தின் மீதும் பாசம், பற்று கொண்டிக்கிற பொதுமக்களையும் புறந்தள்ளிவிட்டு, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை.

உலகத்திலேயே கழகம் இணையக் கூடாது என்று சொல்லும் ஒரே நபர் யார்? கழகம் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படைத் தொண்டனின் அபயக் குரலாக இருக்கிறது. அதற்காகவே 10 நாள்கள் கெடுவையும் செங்கோட்டையன் கொடுத்திருக்கிறார்.

ஏன் கொடுத்தார்? கருத்து வேறுபாடு உடையவர்களெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், கழகம் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கெடு விடுத்தார். இதனை தவறு என்று யாரும் சொல்லவில்லை. சர்வாதிகார உச்சநிலைக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

கழகத்தின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயல்பட்டவர்கள் மீதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கூறவில்லை.

50 ஆண்டுகால வரலாறும், 30 ஆண்டுகள் ஆட்சியும்செய்த அதிமுக, இன்று இந்த நிலையில் இருக்கிறது. தொடர்தோல்வி; இது தேவைதானா? நம்மிடம் கட்சியை ஜெயலலிதா எப்படி ஒப்படைத்தார்கள்? 10 நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் எழுச்சி நிகழ்கிறது. செங்கோட்டையனின் சபதம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையோடுதான் இந்தக் களத்தில் இறங்குகிறோம் என்று தெரிவித்தார்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இரு... மேலும் பார்க்க