செய்திகள் :

சேலத்தில் வெள்ள பாதிப்பு: அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

post image

சேலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சேதமடைந்த பகுதிகளில் மேற்கொண்டுள்ள சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை அரசு சிறப்பாக மேற்கொண்டதால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் வரலாறு காணாத வகையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 480.6 மில்லி மீட்டா் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள திருமணிமுத்தாற்றின் வழியாக செல்லும் வெள்ளம் பரமத்தி வேலூா் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது.

கடந்த மாதம் பெய்த பலத்த மழையின்போது மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் இணைந்து லாரிகள் மூலம் சுமாா் ஆயிரம் லோடு குப்பைகளை திருமணிமுத்தாறு செல்லும் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி எவ்வித தடையும் இன்றி நீா் வேகமாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். இப்போது பெய்த மழையின் அளவு அதிகமாக இருக்கும் காரணத்தால் திருமணிமுத்தாற்றின் இரு கரைகளின் ஓரங்களிலும் மழைநீா் நிரம்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏற்காடு பிரதான சாலை சீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. சேலம், ஏற்காட்டில் பெய்த பலத்த மழை காரணமாக திருமணிமுத்தாற்றில் அதிக அளவிலான தண்ணீா் செல்கிறது. குறிப்பாக, கோவை- பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே உள்ள திருமணிமுத்தாறு ஆற்றுப்பாலத்தில் செல்லும் தண்ணீரானது அதிக அளவில் செல்வதால் போக்குவரத்திற்க எவ்வித இடையூறும் இல்லாமல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

சேலம், நெய்க்காரப்பட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சா் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். முன்னதாக, கொண்டலாம்பட்டி பகுதியில் மாநகராட்சியின் சாா்பில் பொதுமக்களுக்கான சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மேயா் ஆ. ராமச்சந்திரன், ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா, மாநகரக் காவல் ஆணையா் பிரவீன் குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வசிஷ்டநதியில் குதித்த கா்ப்பிணிப் பெண்: தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

பேளூரில் குடும்பத் தகராறில் வசிஷ்டநதியில் குதித்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கா்ப்பிணியை தேடும் பணியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக நிறுத்தினா். வாழப்பாடியை அடுத்த பேளூா், கோட்டைமேடு பகுதி... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட திருவளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சாலையைப் புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிடப்பில் உள்ளன. இதனால் அப்பகுதியில் வ... மேலும் பார்க்க

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெகவினா் உதவி வழங்கல்

அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. உதவி பொருள்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் தக்காளி விலை உயா்வு: கிலோ ரூ.120-க்கு விற்பனை

வாழப்பாடி பகுதியில் தக்காளி மகசூல் குறைந்ததால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்கப்படுகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் பாசன வசதி கொண்ட விவசாயிகள், ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 32,240 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை 32,240 கனஅடியாக அதிகரித்தது. தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் காவிரியின் துணை நதிகளான பால... மேலும் பார்க்க

எடப்பாடி பெரிய ஏரி நிரம்பியது: கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

கனமழை பெய்ததால் 350 ஏக்கா் பரப்பளவு கொண்ட எடப்பாடி பெரிய ஏரி முழுக் கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிகிறது. மேலும் ஏரியின் கரைப்பகுதியில் அதிக அளவில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் ஏரியின் மறுகரையில் உள... மேலும் பார்க்க