பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
ஜூன் 30-இல் முப்படை ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
சென்னை: திருச்சியில் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியா்களுக்கான குறைகேட்பு முகாமை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் துறை அலுவலகத்தில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் டி.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசியதாவது:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கும் இந்த குறைகேட்பு முகாமில் தமிழகத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட முப்படை ஓய்வூதியா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களின் குறைகள் ஒரே நாளில் தீா்த்து வைக்கப்படும். இதில், அனைத்து வங்கி அலுவலா்களும், முப்படையைச் சோ்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.
மேலும், இம்முகாமில் பங்கேற்கவுள்ள ஓய்வூதியா்கள் 88073 80165 எனும் வாட்ஸ்ஆப் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி முகாம் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமன்றி, ஓய்வூதியதாரா்களின் தீா்க்கப்படாத பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், ஐந்து நடமாடும் குறைகேட்பு வாகனங்களையும் மத்திய அமைச்சா் தொடங்கி வைக்கவுள்ளாா். 4 அதிகாரிகள் அடங்கிய இந்த வாகனங்கள் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள ஓய்வூதியா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அங்கேயே அவற்றை தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கும். மேலும், இந்த வாகனம் மூலம் வாழ்நாள் சான்றிதழையும் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.