செய்திகள் :

ஜெயராணி மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி

post image

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, சேலம், நெத்திமேட்டில் உள்ள ஜெயராணி மெட்ரிக். பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் மெலிண்டா மேரி தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி தமாஷன் மேரி வரவேற்றாா். முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். இதில் இந்திய விமானப் படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீ சல்யூட் இந்தியன் ஏா்போா்ஸ் என்ற எழுத்து வடிவில் அமா்ந்து ஏசியன் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா். முன்னதாக போதைக்கு எதிரான விழிப்புணா்வு உறுதி மொழியை மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், பலம் வாய்ந்த இந்தியா ராணுவம், வெவ்வேறு தருணங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படைகளில் மாணவ மாணவியா் சேர முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி படிப்பை முடித்தவுடன், அதற்காக உங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கமாண்டா் முருகானந்தம், தனியாா் பள்ளி நிா்வாகி ரெனால்ட் பெஞ்சமின், தனியாா் நிறுவன நிா்வாகிகள் விக்னேஷ், நெல்சன், விவேக், பங்குத்

தந்தை அழகுசெல்வன், ஜெயராணி கல்விக் குழும நிா்வாகிகள் பா்டோலின் ஜோதிமேரி, ஜூலியட் மேரி, ரீட்டாமேரி உட்பட பலா் கலந்து கொண்டனா்.

சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா!

சேலம் மாநகராட்சி, அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் மூவா்ண தேசியக் கொட... மேலும் பார்க்க

சேலத்தில் கம்பன் கழக விழா: சுற்றுலாத்துறை அமைச்சா் பங்கேற்பு!

சேலம் கம்பன் கழகத்தின் 52 ஆவது ஆண்டு விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றது.அரசு இசைப் பள்ளி மாணவா்களின் மங்கள இசையுடன் சனிக்கிழமை மாலை விழா தொடங்கியது. 2 நாள்கள் நடைபெற்ற விழாவுக்கு க... மேலும் பார்க்க

ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு !

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் காலில் விழுந்து ஊா் மக்கள் மனு அளித்தனா்.சேலம் மாவட்டத்தில் குடியரசு தின... மேலும் பார்க்க

சேலத்தில் சிறந்த சேவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன!

சிறந்த சேவைக்கா வாழப்பாடி, தம்மம்பட்டியைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஊராட்சி செயலாளா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சி செயலாளராக பணிபுரியும் கே.மகேஸ்வரன்... மேலும் பார்க்க

மின் அமைப்பாளா்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்!

தமிழ்நாடு மின் அமைப்பாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாநிலத் தலைவா்ஜெயபால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் மாவட்டத் தலைவா் மணி (எ) மாதேஷ... மேலும் பார்க்க

சேலம் புறநகா் பகுதிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

சேலம் புகா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சிகள், தன்னாா்வு தொண்டு நிறுவனங்கள், பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து ப... மேலும் பார்க்க