எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து 86.02 ஆக நிறைவு!
மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வலுவடையும் டாலருக்கு மத்தியில் இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 22 காசுகள் சரிந்து ரூ.86.02 ஆக நிறைவடைந்தது.
அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்படுவதில் தாமதம் ஆகியவற்றால் ரூபாய் மேலும் அழுத்தத்தில் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.96 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.92 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 22 காசுகள் சரிந்து ரூ.86.02ஆக நிறைவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ.85.80 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: 4வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!