"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை |...
தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது
புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத்தலைவா் கே.சக்திவேல் தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினா் எம்.சுப்ரமணிய, பரமத்தி ஒன்றியச் செயலாளா் குப்பம் கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவா் கே.கந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
புகழூா் வட்டத்திற்குள்பட்ட காருடையாம்பாளையம் கிராமம், கிழக்குத் தெரு அருந்ததியா் மக்களின் மயான நிலத்தில் அத்துமீறி நுழைபவா்கள் மற்றும் மயான பயன்பாட்டை தடுப்பவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட 30 பேரை வேலாயுதம்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.