செய்திகள் :

`தன் நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார் மஸ்க்; நான்..!’ - ட்ரம்ப் சொல்வதென்ன?

post image

ஜூலை 5-ம் தேதி உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இவருக்கும் இடையே உருவான கருத்து மோதலின் விளைவே இந்தக் கட்சி.

எலான் மஸ்க் கட்சி தொடங்கியிருப்பது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது...

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

மூன்றாவது கட்சி

"எலான் மஸ்க் கடந்த ஐந்து வாரங்களாக நடந்துகொள்வதைப் பார்த்து கவலை கொள்கிறேன். அமெரிக்கா வரலாற்றில் இதுவரை மூன்றாவது கட்சி வெற்றி பெற்றதில்லை என்பது நன்கு தெரிந்தும், எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்க நினைக்கிறார்.

மூன்றாவது கட்சி தொடங்குவது குழப்பத்தையும், பிரச்னையையும் தான் உருவாக்கும். இதை இடதுசாரி ஜனநாயகவாதிகள் தான் இதுவரை செய்து வந்தனர்.

இன்னொரு பக்கம், குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள், அருமையாக ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இதுவரை நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, பெரிய சட்டம் ஒன்றை இப்போது தான் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

எலான் மஸ்கிற்கு அப்படியானது அல்ல!

இது ஒரு சிறப்பான சட்டம். ஆனால், எலான் மஸ்கிற்கு அப்படியானது அல்ல. இந்த சட்டம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருந்து வந்த தள்ளுபடிகளை ரத்து செய்துள்ளது.

இந்த சலுகைக்கு நான் ஆரம்பத்தில் இருந்தே எதிரானவன். இந்த சலுகை இருந்திருந்தால், குறைந்த காலக்கட்டத்தில் அனைவரும் எலெக்ட்ரிக் கார்கள் வாங்க வேண்டும் என்று நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இப்போது மக்கள் அவர்களுக்கு வேண்டிய கார்களை வாங்கிக்கொள்ளலாம்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எனக்கு ஆச்சரியம்...

இதை எதிர்த்து நான் இரண்டு ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். எலான் என்னை ஆதரித்தப் போது கூட, என்னுடைய இந்த நிலைப்பாடு குறித்து அவருக்கு தெரியுமா என்று கேட்டேன்.

நான் பேசிய ஒவ்வொரு பேச்சிலும், எங்களது அனைத்து உரையாடலிலும் இது குறித்து பேசப்பட்டிருந்தது. ஆனால், அவர் இது அவருக்கு பிரச்னை இல்லை என்று கூறினார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நாசாவும், எலான் மஸ்க் நண்பரும்...

எலான் மஸ்க் அவருடைய நெருங்கி நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார். அவர் மிக நல்லவர் தான்.

ஆனால், அந்த நண்பர் தீவிர ஜனநாயக கட்சி விசுவாசி... அவர் இதுவரை குடியரசு கட்சிக்காக எதுவும் செய்ததில்லை என்பதை தெரிந்ததும் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால், எலான் மஸ்கின் கார்ப்பரேட் நிறுவனம், நாசா உடன் பிசினஸ் நடத்தி வருவதையடுத்து, அவருக்கு நன்கு தெரிந்தவர் இந்தப் பதவிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன்.

காரணம், என்னுடைய முன்னுரிமையே, அமெரிக்க மக்களைக் காப்பது ஆகும்".

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க