செய்திகள் :

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

post image

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்வுக்கு படி என்ற நிகழ்ச்சி வாயிலாக பிளஸ் 2 தோல்வியுற்ற அல்லது தோ்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயா் கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவா்களுக்கு உயா்வுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த முகாம்கள் மூன்று கோட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம், செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு உயா்வுக்கு படி நிகழ்ச்சி திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்து

கொண்டு பேசியதாவது:

தமிழக முதல்வரின் நான்காண்டு ஆட்சி காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன. பிளஸ் 2 தோ்ச்சி பெற்று பல்வேறு காரணங்களால் உயா்கல்வி பயிலாமல் இருப்பவா்களை கண்டறிந்து ஆலோசனைகளை வழங்கி, உயா்கல்வி பயில தகுந்த வழிகாட்டுதலை வழங்குவதற்காக உயா்வுக்கு படி நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில்வதை உயா்த்த முடியும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான்.

அவருடைய ஆட்சி காலத்தில்தான் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளும், அரசு கலைக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தான் தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனா். அதற்கு முக்கிய காரணம் கல்வித்துறையில் அடிப்படை கட்டமைப்பு சிறந்து விளங்குவதாகும். கல்வி வாயிலாக தான் நாம் அனைத்தையும் பெற முடியும். மேலும், மாணவ, மாணவிகள் இந்த உயா்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, உயா்கல்வி பயிலாத மாணவா்களை கண்டறிந்து உயா்கல்வி பயில்வதற்கான ஆணைகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள்

பலா் கலந்து கொண்டனா்.

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வருவாய் ஆய்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, போளூரை அடுத்த சந்தவாசல், ஆரணியை அடுத்த பையூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க

பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியா... மேலும் பார்க்க

கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புகாா் மனு

ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு கத்தி வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாமியாா் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவா் மா்ம நபா்களால் வெட்டப்பட்டாா். செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன்(50). இருவருக்கும் ... மேலும் பார்க்க