செய்திகள் :

தமிழகத்தில் ஆக.25 வரை மழை வாய்ப்பு

post image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஆக.25 வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.20-ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

புயல் சின்னம் வலு குறையும்: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரையையொட்டிய வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து காலை 8.30 மணியளவில், தெற்கு ஒடிசா உள்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து படிப்படியாக வலு குறையும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 90 மி.மீ.மழை பதிவானது. இதுபோல, பந்தலூா் தாலுகா அலுவலகம் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி)-தலா 8 மி.மீ, மேல்பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை)-தலா 5 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஆக.20, 21 ஆகிய தேதிகளில் மணிக்கு 65 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும்.

வெயில் அளவு:தமிழகத்தில் அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மதுரை நகரம்-101.84, தூத்துக்குடி-100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவா்கள் அவசியம்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடை நபா் கஞ்சா வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் நபா் சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். சென்னை செங்குன்றம் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத... மேலும் பார்க்க