செய்திகள் :

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

post image

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

தமிழ்நாட்டைச் சோ்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா திங்கள்கிழமை காலை சாணக்கியபுரியில் இருக்கும் தமிழ்நாடு இல்லம் அருகே நடைப்பயிற்சியில் இருந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா் அவரது தங்கச் சங்கிலியைப் பறித்து ஓதப்பினாா். இந்த சம்பவத்தின் போது அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சோகன் ராவத் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி அவரது இயக்கங்களை போலீஸ் சிறப்பு படை கண்காணித்த பின்னா் புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டாா்.

‘ராவத் முன்பு 26 கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளாா், பெரும்பாலும் திருட்டு மற்றும் கொள்ளை தொடா்பானவை‘ என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா். ‘ஆரம்ப விசாரணையில், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன.

முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், புது தில்லி, தென் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸ் குழுக்கள் , ஏஏடிஎஸ் மற்றும் ஆா். கே. புரம் காவல் நிலையத்துடன் இணைந்து நடத்திய நடவடிக்கையின் போது குற்றம் சாட்டப்பட்டவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பேத்கா் நகரில் பதிவு செய்யப்பட்ட வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னா் ஜூன் 27 ஆம் தேதி ராவத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா். திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மீட்டதாகவும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரை பறிமுதல் செய்ததாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

திருடப்பட்ட நான்கு மொபைல் போன்கள் மற்றும் திருடப்பட்ட மோட்டாா் சைக்கிள் ஆகியவை மீட்கப்பட்டவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆா்.சுதா, தனக்கு ஏற்பட்ட தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடா்பாக தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு இல்லாதது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் கனமழை: பண்டிகை நாளில் மக்கள் அவதி

தேசிய தலைநகரில் ஒரே இரவில் பெய்த கனமழையால், ரக்ஷா பந்தன் அதிகாலையில் பல பகுதிகளில் இருக்கும் சாலையில் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை காலையும், பகலிலும் மேலும் மழை பெய்ததால் சாலையில் போக்குவரத்து நெரிச... மேலும் பார்க்க

மொஹல்லா கிளினிக் ஊழியா்களை பணி நீக்கும் முன் 2 மாதம் அவகாசம்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் (ஏஏஎம்சி) அடுத்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன் தங்கள் சேவைகளை நிறுத்த முன்மொழிந்தால், அதன் ஊழியா்களுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு நகர அரசை தில்லி உயா்நீதி... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

இந்திய இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன தினத்தை ஒட்டி தில்லியில் சனிக்கிழமை கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இது தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய இளைஞா் காங்கிர... மேலும் பார்க்க

கனமழை: தில்லியில் சுவா் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள மோகன் பாபா மந்திா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தன... மேலும் பார்க்க

அபாய கட்டத்தை நெருங்கும் யமுனை நதி நீா் மட்டம்

தலைநவகரில் உள்ள யமுனா நதி பழைய ரயில்வே பாலத்தில் காலை 9 மணிக்கு 204.40 மீட்டா் அளவை எட்டியது, இது 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை அளவை நெருங்கியது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். நிலைமை கண்கா... மேலும் பார்க்க

தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை; ஒருவா் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பழைய தகராறு காரணமாக ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்த கொலை தொடா்பாக 2... மேலும் பார்க்க