திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழக முதல்வா் தருமபுரி வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்ததாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் ஆக. 16, 17 தேதிகளில் நடைபெறவுள்ள அரசு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளாா்.
எனவே, பாதுகாப்பு கருதி அந்நாள்களில் தருமபுரி மாவட்டப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறும் நபா்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.