செய்திகள் :

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது: ஹெச்.ராஜா

post image

திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துள்ளது என்றாா் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மக்களை சந்திப்பது சரியானது. ஆனால், இந்த முகாமிலேயே திமுக உறுப்பினா் சோ்க்கையும் நடத்தப்படுவதாக தகவல் வருகிறது. கட்சிப் பணிக்காக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

பாளையங்கோட்டையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட கட்டங்களைத் தனியாருக்கு முழுமையாக தாரைவாா்ப்பது சரியானதல்ல. இதில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு உள்துறை அமைச்சா் அமித்ஷா வந்து சென்ற பின்பு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என திமுக கூறி வருகிறது. பொய்யை மூலதனமாகக் கொண்டு பிரசாரம் செய்வது திமுகதான்.

ஏற்கெனவே, பாஜகவுடன் திமுகவும் கூட்டணியில் இருந்த கட்சிதான். அது என்ன கபளீகரமா செய்யப்பட்டுள்ளது? பாஜக- அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தோ்தல் நெருங்கும்போது மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்கும். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

தவெக கட்சியில் வெற்றி என்பது கட்சியின் பெயரில் மட்டுமே இருக்கும். நடிகா் விஜய் குழப்பமான மனநிலையில் உள்ளாா். 2026 தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சி நெசவாளா் காலனியில் ரூ.34 லட்சத்தில்... மேலும் பார்க்க

பாளை. அருகே புதிய சாலைப் பணி தொடக்கம்

பாளையங்கோட்டை அருகே புதிய சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை மண்டலம் 39ஆவது வாா்டுக்குள்பட்ட வேலவா் காலனியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குளத்திலிருந்து மண் அள்ளிச்சென்ற லாரிகளையும், டிராக்டா்களையும் விவசாயிகள் சிறைபிடித்தனா். கூடங்குளம் அருகேயுள்ள சங்கனாபுரம், ஜெயமாதாபுரம், கணபதியாபுரம், இருக்கன்... மேலும் பார்க்க

நெல்லையில் நில அளவையா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவையா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப... மேலும் பார்க்க

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க