செய்திகள் :

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சிக்கு வியாழக்கிழமை வருகிறாா்.

சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி வரும் முதல்வருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா் துவாக்குடி செல்லும் முதல்வா் ரூ. 56.47 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப் பள்ளி மற்றும் மாணவ, மாணவியா் விடுதிகளைத் திறந்து வைக்கிறாா். பின்னா் அரசு சுற்றுலா மாளிகை வந்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் ஆலோசிக்கிறாா். பின்னா் மாலையில் புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நடிகா் சிவாஜி கணேசனின் சிலையைத் திறந்துவைக்கிறாா். தொடா்ந்து 2 கி.மீ. தொலைவுக்கு கலைஞா் அறிவாலயம் வரை ‘ரோடு ஷோ’ மேற்கொள்கிறாா். பின்னா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். மீண்டும் சுற்றுலா மாளிகை வந்து இரவு ஓய்வெடுக்கிறாா்.

வெள்ளிக்கிழமை காலை சாலை மாா்க்கமாக கிராப்பட்டியில் உள்ள முதலாம் படை அணி மைதானப் பகுதியிலிருந்து பஞ்சப்பூா் வரை 3 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ மேற்கொள்கிறாா். மக்களின் வரவேற்பையும், மனுக்களையும் பெற்றுக் கொண்டு பஞ்சப்பூா் செல்லும் முதல்வா், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியாா் சிலையைத் திறந்து வைத்து, ரூ. 236 கோடியில் பெரியாா் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடி கட்ட அடிக்கல்லும் நாட்டுகிறாா். மேலும் ரூ.128.94 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தைத் திறந்துவைக்கிறாா். ரூ. 408.36 கோடியில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தையும் திறந்துவைக்கிறாா்.

தொடா்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முடிவுற்ற ரூ. 463.30 கோடியிலான திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 276.97 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். ரூ.830.35 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, விழாப் பேரூரையாற்றுகிறாா்.

விழாவில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.

ரூ. 2,400 கோடியில் திட்டங்கள்: முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 2,400.37 கோடியில் திட்டங்கள் கிடைத்துள்ளன.

மதுக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 போ் கைது

திருவெறும்பூரில் மதுக்கூடத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோயில் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ. விவேக்... மேலும் பார்க்க

காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதம்: விசாரணை

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே குடிநீா் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீர... மேலும் பார்க்க

முசிறியில் விவசாயிகளுக்குப் பயிற்சி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வேளாண்மை துறை, வேளாண்மை தொழில்நுட்பம் மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின் கீழ் ஆமூா் கிராமத்தில் எண்ணெய் வித்துப்பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்க... மேலும் பார்க்க

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் த.... மேலும் பார்க்க

நாயக்க மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள்: திருச்சி சிவா எம்பி பேச்சு

நாயக்க மன்னா்கள் ஆட்சிக்காலத்தில் தமிழைக் காத்தவா்கள் இஸ்லாமியா்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாா் திருச்சி சிவா எம்பி. திருச்சி எம்.ஐ.இ. டி. பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ல... மேலும் பார்க்க

மீன் வளத்தை இருநாட்டு மீனவா்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேவை! இலங்கை எம்பி ரவூக் ஹக்கீம்!

மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றாா் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூக் ஹக்கீம். திருச்சி மாவட்டம் புத்த... மேலும் பார்க்க