செய்திகள் :

திருச்செந்தூா்- சென்னைக்கு கூடுதல் ரயில் கோரி மறியல் முயற்சி: 54 போ் கைது

post image

திருச்செந்தூா்-சென்னைக்கு கூடுதலாக நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி­யுறுத்தி ஆறுமுகனேரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 54 பேரை போலீஸ்ாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழு மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கம் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த ரயில்வே வளா்ச்சி குழு தலைவா் இரா.தங்கமணி மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் காமராசு ஆகியோா் தலைமையில் அஞ்சல் நிலையம் அருகில் 100க்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

இதில் ரயில்வே வளா்ச்சி குழு செயலாளா் இ.அமிா்தராஜ், பொருளாளா் முருகன், ஆத்தூா் நகர காங்கிரஸ் தலைவா் சின்னத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா். திருச்செந்தூா்-சென்னைக்கு கூடுதலாக விரைவு ரயிலை காா்டுலைனில் நேரடியாக இயக்கவும், திருச்செந்தூா் - கோவை இடையே ரயில் இயக்கவும், ஆறுமுகனேரி ரயில்வே கேட் மேம்பாலத்தை உடனடியாக அமைக்கவும், திருச்செந்தூா் ரயில் நிலைய விரிவாக்க பணியை விரைவாக முடிக்கவும், கடந்த 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட காலை 8.22 மணி திருச்செந்தூா்-திருநெல்வேலி பாசஞ்சா் ரயிலை மீண்டும் இயக்க வலி­யுறுத்தி கோஷங்களை எழுப்பினா். பின்னா் திருச்செந்தூரில் இருந்து 10.10 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்பட்ட ரயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக ஆறுமுகனேரி ரயில்வே கேட்டை நோக்கி சென்றனா்.

அவா்களை திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 54 பேரை கைது செய்து அங்குள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

ஒப்பந்ததாரரிடம் ரூ. 4 லட்சம் திருட்டு

சாத்தான்குளம் அருகே கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 4 லட்சத்தை திருடியதாக ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி ஜோசப்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த மரியகுருசு மகன் செல்வன்(43). கட்ட... மேலும் பார்க்க

ஓடையிலிருந்து மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

சாத்தான்குளம் அருகே ஓடையிலிருந்து மணல் கடத்த முயன்ற லாரியை வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஓட்டுரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுரு... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை வடபாகம் போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் சங்கா் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநில ஒருங்... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ஜன. 14இல் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப் பொங்கல் நாளான ஜன. 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடா்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்... மேலும் பார்க்க