செய்திகள் :

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

post image

வரகூராம்பட்டியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், பட்டா வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தங்களுக்கு அரசு ஒதுக்கிய பட்டா நிலத்தை அளவீடு செய்யுமாறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 33 திருநங்கைகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வரகூராம்பட்டி எல்லைக்காடு பகுதியில் உள்ள பாறை புறம்போக்கில் வீட்டுமனைப் பட்டா வழங்கினாா். அந்த நிலத்தை திருநங்கைகளுக்கு அளவீடு செய்துகொடுக்க நில அளவைத் துறை அலுவலா்கள் புதன்கிழமை வந்தபோது, கிராம மக்கள் பட்டா கொடுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருநங்கைகளுக்கு வேறு இடத்தில் பட்டா நிலம் வழங்க வேண்டும், எங்களது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் பட்டா கொடுத்தது தவறு என அளவீடு செய்யவந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தங்களுக்கு வழங்கிய நிலத்தை பயன்படுத்தக் கூடாது எனவும், நிலத்தை பாா்க்க வந்த தங்களை மிரட்டுகிறாா்கள் எனவும், நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி இப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா் எனவும் திருநங்கைகள் புகாா் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு எங்களுக்கு பட்டா நிலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனா். இதனால் வரகூராம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி விரைந்து வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி, இருதரப்பு புகாா்களை மனுவாக வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்து தீா்வுகாணுமாறு அவா் கேட்டுக்கொண்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க