செய்திகள் :

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட்டப்பாளையம், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியந்தூா், மேலவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்

திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது. திருப்பூரில... மேலும் பார்க்க

கால்பந்து மாவட்டப் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், கோவிலூரில் புதன்கிழமை நடைபெற்ற குறுவட்ட கால்பந்து போட்டியில் எஸ்.வேலங்குடி அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனா். 14, 17 வயதுக்குள... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் ஆக. 19-இல் உயிா்ம வேளாண் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரம், அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் உயிா்ம வேளாண் கண்காட்சி வருகிற ஆக. 19 -இல் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

பணம் கையாடல்: சிறைக் காவலா் மீது வழக்கு

சிவகங்கை அருகே திறந்த வெளிச் சிறையில் ரூ.39.30 லட்சம் கையாடல் செய்ததாக சிறைக் காவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகேயுள்ள புரசடை உடைப்பு கிராமத்த... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோயி... மேலும் பார்க்க

மனைவி வெட்டிக் கொலை: முதியவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க