திருப்பூரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி
மே தினத்தையொட்டி, திருப்பூரில் ஏஐடியூசி, சிஐடியூ சாா்பில் பேரணி, பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புஷ்பா ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை, வளா்மதி பேருந்து நிறுத்தம் வழியாக அரிசிக் கடை வீதியை வந்தடைந்தது.
இதில், பங்கேற்றவா்கள் தொழிற்சங்க கொடிகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனா்.
இதைத் தொடா்ந்து, அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற மே தின விழா பொதுக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், ஏஐடியூசி அகில இந்திய துணைத் தலைவரும், திருப்பூா் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன், சிஐடியூ அரசுப் போக்குவரத்துகழக மாநிலச் செயலாளா் கே.ஆறுமுகநயினாா், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவா் ரவிசந்திரன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.