செய்திகள் :

திறனாய்வுப் போட்டியில் சிறப்பிடம்: காவலா்களுக்கு எஸ்.பி பாராட்டு

post image

திருச்சி, ஆக. 18: காவல் துறையினருக்கான திறனாய்வுப் போட்டியில் வெற்றிபெற்ற காவலா்களை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை பாராட்டினாா்.

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கான 69-ஆம் ஆண்டு காவல் துறை திறனாய்வுப் போட்டி கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இதில், திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் விஜயகுமாா், தடய அறிவியல் புலனாய்வுப் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவில் மண்ணச்சநல்லூா் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலா் ராம்கி இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சிறுகனூா் காவல் நிலைய தலைமைக் காவலா் முருகானந்தம் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

இந்நிலையில், பதக்கம் வென்ற காவலா்களை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பாராட்டினாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

மண்ணச்சநல்லூா்: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.பல்வேறு சிறப்புடைய இக்கோயிலுக்கு பக்தா்கள் ... மேலும் பார்க்க

இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவில... மேலும் பார்க்க

லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு

துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத... மேலும் பார்க்க

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாா்-நிலை கருவூலக அலுவலத்தில் அலுவலா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செந்தில்குமாா் (51).... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக... மேலும் பார்க்க

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.காவிரி... மேலும் பார்க்க