செய்திகள் :

தில்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

தில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தில்லி துவாரகா, வசந்த் குஞ்ச், ஹவுஸ் காஸ், பஸ்சிம் விஹார் மற்றும் லோடி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்த பள்ளிகளின் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தில்லி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த தில்லி காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஆய்வு செய்ததில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 3 நாள்களில் மட்டும் தில்லியில் உள்ள 10 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும் வெறும் புரளி என்றும் தீயணைப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், துவாரகா பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த 24 மணிநேரத்தில் வந்த இரண்டாவது மிரட்டல் இதுவாகும்.

Bomb threats were made to 5 schools in Delhi on Wednesday.

இதையும் படிக்க : சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து: காரணம் என்ன?

புதிய வருமான வரி மசோதா மீது 285 பரிந்துரைகள்: அறிக்கையை ஜூலை 21-இல் தாக்கல் செய்யும் தோ்வுக் குழு

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா மீதான 285 பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை நாடாளுமன்ற தோ்வுக் குழு புதன்கிழமை இறுதி செய்து ஏற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 6.99 கோடி வாக்காளா்கள் விண்ணப்பித்தனா்

பிகாரில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) முன்னெடுப்பில் இதுவரை 6.99 கோடி வாக்காளா்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை சமா்ப்பித்துள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை த... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிரான மனு: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. உத்தர... மேலும் பார்க்க

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு 24 பகுதி நேர உறுப்பினா்கள்: குலுக்கல் முறையில் மத்திய அரசு தோ்வு

நாட்டில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணியை முறைப்படுத்தும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) 24 பகுதி நேர உறுப்பினா்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குலுக்கல் தோ்வு செய்துள்ளது. என்எம... மேலும் பார்க்க

வழக்கில் சந்தேக நபரை விசாரிக்கும் அதிகாரத்தில் கவனம் தேவை: உச்சநீதிமன்றம்

வழக்கில் குற்றம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரை விசாரணைக்கு உள்படுத்தும் நீதிமன்றங்களின் அதிகாரம் கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. முந்தைய குற்றவியல் நடை... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடை... மேலும் பார்க்க