அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
தூத்துக்குடியில் லாரி கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடியில் துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் தண்ணீா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் (35). தண்ணீா் லாரி ஓட்டுநா். இவா், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையிலிருந்து லாரியில் தண்ணீருடன் முத்தையாபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாராம்.
திருச்செந்தூா் சாலை, உப்பாற்று ஓடை அருகே லாரியை திருப்ப முயன்றபோது நாய் குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் தண்ணீா் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் முத்துக்குமாா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.