தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
பெரியகுளத்தில் தூய்மைப் பணியாளரைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி, சாலை மறியல் நடைபெற்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்தவா் பெத்தனசாமி. பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் இவா், குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநா் வைரவனுடன் இணைந்து வடகரை பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் வியாழக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த நபா், தூய்மைப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, தகராறு செய்ததோடு இருவரையும் தாக்கினாா்.
இதையறிந்த தூய்மைப் பணியாளா்கள் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் முன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அசன் முகமதுவும் போலீஸாரும் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கிய நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா். இதனால், பெரியகுளம் - தேனி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.