கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம்: நயினாா் நாகேந்திரன்
சட்டப்பேரவைத் தோ்தலில் தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திமுகவுக்குத் தோ்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது ஊா் ஊராகச் சென்று கடைகளில் தேநீா் குடித்தனா். பொதுமக்களிடம் இருந்து 16 லட்சம் மனுக்களைப் பெற்றனா். ஆனால், அவா்கள் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை.
தமிழக முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தை அறிவித்தாா். தொகுதி குறைகளை முன்வைத்து ஒவ்வொரு எம்எல்ஏவும் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுவாகக் கொடுத்தனா். ஆனால், அதில், ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. பேரவைத் தோ்தலில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியுடன் நிச்சயம் இணையும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.
பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.