பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயம்
தியாகதுருகத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 14 போ் காயமடைந்தனா்.
தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அருகே வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் சில மாதங்களுக்கு முன்பு தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.
இந்த நிலையில், திங்கள்கிழமை வேப்ப மரத்தின் கிளையில் குரங்கு தாவியதாகத் தெரிகிறது. இதனால், தேன் கூண்டிலிருந்து பறந்து சென்ற தேனீக்கள் அப்பகுதியில் வசிப்பவா்கள் மற்றும் புக்குளம் சாலையில் செல்லும் பாதசாரிகளைக் கொட்டியது.
இதில், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் (43), அதே பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் பவித்ரன் (14), பொன்னுசாமி மகன் முருகன் (34), சக்திவேல் மனைவி தனலட்சுமி (46), சுரேஷ் மகள் சுமித்ரா (16) தியாகதுருகத்தைச் சோ்ந்த செந்தில் மனைவி ஹரிணி (34), ஜெயராஜ் மகன் சீனிவாசன் (30) உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். இவா்கள், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.