மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்
தோனி டு கோலி... ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் சுமார் ரூ.200 கோடி வரை இழக்கும் இந்திய வீரர்கள்!
தற்போது நடந்து முடிந்த மழைக்கால நாடளுமன்ற கூட்டத் தொடரில், ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025) எனும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சம் திறன், வாய்ப்பு அல்லது இந்த இரண்டின் அடிப்படையிலான எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் முற்றிலும் தடை விதிப்பதாகும்.
குறிப்பாக, ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 (Dream 11) உள்ளிட்ட ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளை தடை செய்யும் சூழல் உருவாகியிருக்கிறது.

இதன்காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்ஸரிலிருந்து ட்ரீம் 11 விலகிவிட்டது. இப்போது, புதிய ஸ்பான்ஸரை பி.சி.சி.ஐ தேடிக்கொண்டிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் பி.சி.சி.ஐ-க்கு ஸ்பான்ஸர் இழப்பு என்றால், அதே மசோதாவால் கோலி முதல் தோனி முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் பலருக்கு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
எப்படியெனில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித், ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர் ட்ரீம் 11 ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.
இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், சிராஜ், ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், ரின்கு சிங், கங்குலி ஆகியோர் My11 சர்க்கிள் (My11 Circle) ஒப்பந்தத்தில் இருக்கின்றனர்.
விராட் கோலி MPL உடனும், தோனி WinZO உடனும் ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

Cricbuzz ஊடகத்தில் வெளியான தகவலின்படி, கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி எனவும், ரோஹித், தோனி ஆகியோரின் ஒப்பந்தம் ஆண்டுக்கு ரூ. 6 முதல் ரூ. 7 கோடி எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்ற வீரர்களுக்கு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவால் மேற்கண்ட ஆன்லைன் தடை விதிக்கக்கூடும் என்பதால், இந்திய வீரர்களுக்கு ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படுக்கூடும்.
இதுமட்டுமல்லாது, ஐ.பி.எல் பல அணிகளும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.