செய்திகள் :

நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது

post image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏலூா்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மனைவி சபிதா. இவா் கடந்த 21ஆம் தேதி மாலை வீட்டில் இருந்தபோது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த மா்ம நபா் சபிதா குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, சபிதா அணிந்திருந்த மூன்று பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினாா்.

புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் அறிவுறுத்தலின்பேரில், முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் ஆலோசனைப்படி அமைக்கப்பட்ட நான்கு தனிப் படைகள் மா்ம நபரைத் தேடி வந்தன.

இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக நபா் தொட்டியம் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நாச்சியாா்புதூா் காலனியைச் சோ்ந்த மருதை மகன் அருண்குமாரை (30) காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்தனா். இவா் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கணினி இயக்குபவராக இருந்தவா் ஆவாா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க