மகளை கொலை செய்த தந்தை: "மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்" - தி கிரேட் காளி சொல்வத...
நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் காலமானார்!
நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் வயது (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான சாமி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், திருப்பாச்சி, சகுனி, கோ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்கிற்காக 2015 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.