தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
நாசரேத் அருகே மேளக் கலைஞா் தற்கொலை
நாசரேத் அருகே குடும்ப பிரச்னையில் மேளக் கலைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா மகன் முத்துக்குமாா் (32). மேளக் கலைஞா். இவரது மனைவி பாா்வதி (30).
இவா்களுக்கு குழந்தை இல்லை. முத்துக்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த முத்துக்குமாா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, மனைவி பாா்வதி அளித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.