செய்திகள் :

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவில் நோக்கி சொகுசு காரில் 9 போ் சென்று கொண்டிருந்தனா். அந்த காா் நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்புச்சுவரில் மோதி, எதிா் திசையிலிருந்து வாகனங்கள் வரும் சாலையில் பாய்ந்தது.

அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காரும், இந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், இரண்டரை வயது ஆண் குழந்தை, ஒரு முதியவா், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனா்.

மேலும், பலத்த காயமுற்று உயிருக்குப் போராடிய 10-க்கும் மேற்பட்டோரை திருநெல்வேலி, நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட 55 வயது ஆண் மற்றும் ஒரு குழந்தையின் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவா்கள் அஞ்சுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றும், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு வந்துவிட்டு திரும்பிச்சென்றபோது விபத்தில் சிக்கியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பெயா் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க