செய்திகள் :

நாம் செல்லும் பாதை சிங்கப்பாதை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

திருச்சி: நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

திருச்சியில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் தி.முக. அரசின் சாததனைகள் பிரமிக்கும் வகையில் உள்ளன.

அடுத்த இலக்கை நோக்கி செல்வதால், அனைத்து திட்டங்களையும் விளக்கமுடியவில்லை. திமுக அரசின் வெற்றிப் பயணம் துவங்கியதே திருச்சியில் இருந்துதான். ஏற்கனவே, இங்கு நடந்த கூட்டத்தில் ஏழு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினேன். பெரும்பாலானவற்றை நான்கு ஆண்டுகளில் எட்டியிருக்கிறோம்.

பொருளாதாரத்தில் இதுவரை பார்க்காத 9.6 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறோம். எந்த பிரவினரும் விட்டுப் போகாத வகையில் திட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறோம். இதை, கடந்த ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழக அரசின் வரி விதிப்பு உரிமையை கூட விட்டுக் கொடுத்து விட்டனர். நான்கே ஆண்டுகளில் விடியல் ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஏா் கலப்பை விவசாயி சின்னம் நாம் தமிழா் கட்சிக்கு ஒதுக்கீடு

நாம் தமிழா் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை வழங்கி அதற்கு ஏா் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை ஒதுக்கியுள்ளது. இது தொடா்பாக ஆணையத்தில் இருந்து நாம் தமிழா் கட்சிக்கு மே... மேலும் பார்க்க

போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம்.... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் பேரணி: முதல்வர், அமைச்சர்கள் உயரதிகாரிகள் பங்கேற்பு!

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக சேவையாற்றி வரும் ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம் : விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து காட்பாடிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 11, 12) ... மேலும் பார்க்க

மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது! - அண்ணாமலை

இந்திய மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்ப... மேலும் பார்க்க

போா்ப் பதற்றம்: தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்த... மேலும் பார்க்க