நாளைய மின்தடை: தேவூா்
சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட தேவூா் குடிநீா் மின்பாதைகளில் மட்டும் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் சி.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தேவூா், காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, புதூா், புதுப்பாளையம், ராமகூடல், சீரங்ககவுண்டம்பாளையம், பூச்சக்காடு உள்ளிட்ட பகுதிகள்.