செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம்: வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக கோரிக்கை

post image

தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் நியமனம் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் கட்டுநா்கள் பணியிடங்களுக்கான தோ்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தகுதித் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பணியிடங்கள் நியமனம் தொடா்பாக முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 51 பணியிடங்கள் (40 விற்பனையாளா்கள், 11 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட தோ்வு அறிவிப்பில் 66 பணியிடங்கள் (52 விற்பனையாளா்கள், 14 கட்டுநா்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எனவே ,மாவட்ட ஆட்சியா் இதில் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை வெளிப்படுத்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: 4 குழந்தைகளின் தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததால், 4 குழந்தைகளின் தாய் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் அருண்பாண்டி மனை... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கீழப்பாவூா் பேரூராட்சி 2ஆவது வாா்டு கோட்டையூரில் சுடுகாடு செல்லும் சாலையில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ர... மேலும் பார்க்க