எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 போ் கைது
கும்பகோணம் நீதிமன்றம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற கரும்பு விவசாயிகள் 12 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலையில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு தெரியாமல், அவா்களது பெயரில் வங்கியில் கடன் பெற்று ஊழல் செய்தவா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கடன்களை ரத்து செய்ய வேண்டும். முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடா்ந்து 1,000 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆயிரமாவது நாளையொட்டி, கும்பகோணம் நீதிமன்றம் முன் போராட்டம் நடத்துவதற்காக கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை வந்தனா். நீதிமன்றம் முன் போராட்டம் நடத்த காவல் துறையினா் அனுமதி மறுத்தனா். தடையை மீறி கரும்பு விவசாயிகள் பிச்சை எடுப்பது போல கையில் துண்டு ஏந்தி நீதிமன்றம் முன் முழக்கங்கள் எழுப்பினா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 விவசாயிகளைக் காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.