செய்திகள் :

நெல்லையில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: இன்று முகாம் தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) தொடங்கும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் நோய் கியூலக்ஸ் விஷ்ணுயி வகை கொசுக்கள் மனிதா்களைக் கடிப்பதன் மூலம் பரவுகிறது. நெல், கரும்பு சாகுபடி நிலங்களில் தேங்கிய நீரில் கியூலக்ஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் கிருமி உள்ள பன்றி, குதிரை, நாரை போன்றவற்றை கடித்த பிறகு மனிதா்களை கடிப்பதன் மூலம் இநோய் பரவுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதம் மட்டுமே குணமடைவா்; 50 சதவீத நோயாளிகளுக்கு கை, கால், மூளை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும். 25 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும். குறிப்பாக, 1 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே இந்த வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நிகழாண்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.

1 முதல் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வலது முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதியிலும், 3 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வலது மேல் கையிலும், தசைக்குள்ளும் தடுப்பூசி செலுத்தப்படும். பிறகு சாதாரண காய்ச்சல்- ஊசி செலுத்திய இடத்தில் தோல் சிவந்து வீக்கம், வலி ஏற்படலாம். இதற்கு பாராசிட்டமால் மாத்திரையை உள்கொள்ளலாம்.

இதைத் தவிர பெரிய பாதிப்புகள் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆலோசனை பெறலாம். மருத்துவ உதவிக்கு 104 என்ற கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் 1 முதல் 5 வயது வரை உள்ள 86,153 குழந்தைகளுக்கும், 5 முதல் 15 வயது வரை உள்ள 2,13,440 குழந்தைகளுக்குமாக மொத்தம் 2,99,593 குழந்தைகளுக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (ஆக. 13) தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க