வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
பக்கெட் தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் பக்கெட் தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது பெண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
கடலூா், கே.என்.பேட்டை பகுதியில் வசிப்பவா்கள் சிவசங்கரன்-ஞானசௌந்தரி தம்பதி. இவா்களது இரட்டை பெண் குழந்தைகளுக்கு ஒன்றரை வயது. வியாழக்கிழமை காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குணஸ்ரீ தண்ணீா் பிடித்து வைத்திருந்த பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்தாா். குழந்தையை தேடிய பெற்றோா்கள் பக்கெட் உள்ளே குழந்தை கிடைப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா், குழந்தையின் உடலை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தை இறப்பு குறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.