பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து
மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஆகஸ்ட் 15( வெள்ளிக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, மறு மாா்க்கத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: ஆகஸ்ட் 15- ஆம் தேதி சென்னை சென்ட்ரல் - கோவை ரயில் ( எண்: 12675), சென்னை - கோவை சதாப்தி ரயில்( எண்: 12243) ஆகியவை இருகூா் வழியாக போத்தனூா் வரை இயக்கப்படும்.
எா்ணாகுளம் - கேஎஸ்ஆா் பெங்களூரு ரயில் (எண்: 12678) கோவை நிலையம் செல்லாமல், போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.