செய்திகள் :

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி

post image

பயங்கரவாதம் மறைமுகமானப் போர் அல்ல; பாகிஸ்தானின் நேரடிப் போர் வியூகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 27) தெரிவித்தார்.

பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நகர்புற வளர்ச்சித் திட்டக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''தனது அண்டை வீட்டாரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என நாம் விரும்புவோம். ஆனால் எங்கள் பலத்திற்கு சவால் விட்டால், இந்தியாவிடம் உள்ள நாயகர்களை அவர்கள் காண நேரிடும்.

இது மறைமுகமானப் போர் எனக் கூற முடியாது. ஆபரேஷன் சிந்தூரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்துள்ளது பாகிஸ்தான். அவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்தது. ராணுவ வீரர்கள் இறந்தவர்களின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துகின்றனர். பயங்கரவாதிகளின் நடவடிக்கை மறைமுகமான போர் அல்ல என்பதை இது காட்டுகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து பாகிஸ்தான் செய்வது மறைமுகப் போர் அல்ல; நேரடியானப் போர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் போர் வியூகம்.

அவர்கள் (பாகிஸ்தான்) போரில் ஈடுபாட்டுடன் இருந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். வலுவான உடலாக இருந்தாலும் ஒரு சிறிய முள் நிலையான வலியை ஏற்படுத்தும். பயங்கரவாதம் எனும் முள்ளை நாம் அகற்றுவோம்.

பிரிவினையின்போது பாரத நாடு இரு பிரிவுகளாக்கப்பட்டது. பிரிவினையின் முதல் நாள் இரவு காஷ்மீரில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் முஜாஹிதீன்களால் நடத்தப்பட்டது. அவர்களின் உதவியால், இந்திய நாட்டின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது.

இந்த பயங்கரவாத மரபு 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலும் இதன் ஒரு பதியாகவே உள்ளது. இந்த உள்ளூர் ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய ராணுவத்துன் பலத்தை பார்த்து வருகிறது. இந்தியாவுடனான நேரடிப் போரில் ஒருபோதும் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது என்பதை நமது ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | இறக்குமதியாகும் விநாயகர் சிலைகள்... சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்!

இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க