செய்திகள் :

பாகிஸ்தானுடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

post image

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஹிராநகா் செக்டாரில் உள்ள சான் தண்டா கிராமத்தில் சா்வதேச எல்லையொட்டி எல்லைப் பாதுகாப்புப் படையுடன் (பிஎஸ்எஃப்) இணைந்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை கடந்த ஜூலை 29-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில், ட்ரோன் மூலம் வீசப்பட்ட சுமாா் அரை கிலோ போதைப்பொருள் பொட்டலங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து, இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய சுக்விந்தா் சிங், அா்ஷதீப் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் சம்பா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டத்தில் பணிபுரிந்து வருபவா்கள் ஆவா். இவா்களிடம் இருந்து மேலும் 411 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட கதுவா மாவட்டத்தைச் சோ்ந்த ஃபெரோஸ் தின் எனும் அல்லு என்பவரை காவல்துறையினா் தொடா்ந்து கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டதில், இந்தக் கும்பலின் நிதி பா்வா்த்தனைகளுக்குப் பொறுப்பான பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். இவா் பாகிஸ்தான் கடத்தல்காரருடன் நேரடியாக தொடா்பு வைத்திருந்ததுடன், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத வழிகளில் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளாா் என்பதும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பாக கதுவா மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் சோபித் சக்சேனா கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவா்கள் மிகவும் மோசமான குற்றவாளிகள். அவா்கள் ஏற்கெனவே 30 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் கடத்தியுள்ளனா். இந்த வழக்கில் விசாரணை தொடா்கிறது. மேலும் பலா் கைது செய்யப்படலாம்’ என்றாா்.

இதேபோல், கதுவா மாவட்டத்தில் மற்றொரு வழக்கில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினா் கைது செய்தனா். ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க

பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று... மேலும் பார்க்க

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

அமெரிக்கா வரிகை உயர்த்தாவிட்டால், எங்கள் பொருள்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செப். 3) தெரிவித்துள்ளார். அதிக வரிவிதிப்பால் அமெரிக்காவை திண்டாடவைத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுக்மா மாவட்டத்தின், ராவகுடா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில், மத்திய ரிசர்வ் காவல் படை மற... மேலும் பார்க்க