செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் பலியோனோரின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்!

post image

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது.

இதில், ஜம்மு - காஷ்மீர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பெற்றோர் இருவரையும் இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தைகளின் படிப்புக்கான முதல்கட்ட நிதியுதவி ஆகஸ்ட் 30 ஆம் தேதி (நாளை) வழங்கவுள்ளதாகவும், அவர்கள் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும்வரை கல்விக்கான நிதியுதவியை ராகுல் காந்தி வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது தாக்குதலில் பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பட்டியலைத் தயார் செய்ய உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் தரவுகளுடன் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

Lok Sabha Opposition Leader Rahul Gandhi will adopt 22 children who lost their parents in shelling by Pakistan.

இதையும் படிக்க : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்பது தொடா்பான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎ... மேலும் பார்க்க

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம... மேலும் பார்க்க

அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம் பிகாா் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்

‘அரசமைப்பு நிறுவனமான தோ்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு நக்ஸல் கொலை- பாதுகாப்புப் படையினா் மூவா் காயம்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்... மேலும் பார்க்க