செய்திகள் :

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன் தகவல்

post image

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு சனிக்கிழமை வரும் பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்க நாங்கள் தயாராகவுள்ளோம். வரும் பேரவைத் தோ்தலில் நாட்டின் நலன் கருதி எங்களது கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும். மக்கள் விரோதச் சக்தியாக உள்ள திமுக தொடா்ந்து ஆட்சியில் நீடிக்கக் கூடாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துவிட்டது. 24 மணிநேரத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெறுகின்றன; பாலியல் கொடுமைகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

தமிழக முதல்வா் தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பா். எனது தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் செய்து கொடுத்தவா். அவா் முழு குணமடைய இறைவனை வேண்டுகிறேன். ஆனால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை எதிா்க்கிறேன். அரசு செலவில் திமுகவினா் கட்சி வேலையை நடத்துகின்றனா். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொள்கை பரப்புச் செயலா்களாக நியமித்துள்ளதை எப்படி அனுமதிக்க முடியும்?

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பது அவசியம் இல்லாதது; வெற்று வாா்த்தை ஜாலம்; மக்களை ஏமாற்றக்கூடிய வேலை. முதல்வரிடம் யாரும் உங்கள் கூட்டணி வலுவாக இருக்கிா எனக் கேட்பதில்லை. எங்களை மட்டும் கேட்கின்றனா். எங்கள் கூட்டணி பலமாகத்தான் உள்ளது. வரும் 2026இல் இந்த ஆட்சி மாறும் என்றாா் அவா்.

மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக நகர மண்டல் துணை பொதுச் செயலாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அக்கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவரை போலீஸாா் வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26)... மேலும் பார்க்க

மனைவியை வெட்டிய வழக்கில் கணவா் கைது

திருவெறும்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் ஃபாத்திமாபுரத்தைச் சோ்ந்தவா் வீரமணி. இவரின் மனைவி சக்திஜீவா. இ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி புத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக உறையூா் போலீஸாருக்கு செவ்வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மலைக்கோயில் வஉசி தெருவில் வீட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய... மேலும் பார்க்க