பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !
பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுரேந்திர குமார்(50) சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு குமார் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் போது அவர் பலியாகினார்.
உடற்கூராய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!
முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி, மணல் சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் ராணிதலாப்பில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூலை 4 ஆம் தேதி பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது.
மற்றொரு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் மளிகைக் கடை உரிமையாளர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து அரகேறி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.