செய்திகள் :

பாமக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்! மேடையில் ராமதாஸுக்கு இருக்கை!!

post image

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ஆகியோா் கட்சி ரீதியான மோதல்போக்கு காரணமாக தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் குழுக் கூட்டம் ராமதாஸ் இல்லாமல் முதல் முறையாக தொடங்கியிருக்கிறது.

பொதுக்குழு கூட்ட மேடையில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

பொதுக்குழு கூட்ட மேடைக்கு வந்தபோது, அன்புமணி, நாளைய தமிழகம் யார் என கேள்வி எழுப்ப, அன்புமணி என பொதுக்குழுவில் பங்கேற்றிருந்தவர்கள் பதில் கொடுத்தனர்.

பாமக பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் வந்திருப்பதாக கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் வழியில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம், அதற்கு எல்லோரும் ஒன்றுபடுவோம் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

இன்று தொடங்கிய பொதுக்குழுவில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி, அவரே கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் பெற்றவர் உள்ளிட்டத் தீரமானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்த, ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ராமதாஸ், அன்புமணி இருவரையும் நீதிபதி அறையில் இருந்து தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

இரு தரப்பு வழங்களையும் கேட்ட நீதிபதி, அன்புமணியின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

A general committee meeting is underway in Mamallapuram today under the leadership of PMK leader Anbumani.

இதையும் படிக்க... வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் மாயமா?

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்ச... மேலும் பார்க்க

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்

நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க