செய்திகள் :

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்! - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?

post image

சீனாவில் பாரீஸ் நகரத்தை போலவே ஒரு இடம் இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சமே 108 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் மாதிரி தான், பாரீஸின் அடையாளமாக சீனாவிலும் உள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய ஈபிள் கோபுர பிரதியாகும். பாரீஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ், வெர்சாய்ஸ் தோட்டங்கள் மற்றும் பரோக் நீரூற்றுகள் என பாரீஸின் சில முக்கிய அம்சங்களை இந்த கிராமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் 10,000 பேர் வசிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த கிராமம், குறைந்த மக்கள் தொகையால் "பேய் நகரம்" என்று அழைக்கப்பட்டது.

2013இல் 2,000 பேர் மட்டுமே வசித்தனர். ஆனால் 2017ஆம் ஆண்டு மக்கள் தொகை 30,000 ஆக உயர்ந்தது. இருந்தாலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் இன்னும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமம் ஹாங்ஸோவின் மையப்பகுதியிலிருந்து 40 நிமிட தொலைவில், பொது போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதியில் அமைந்திருப்பது தான்.

தியாண்டுசெங் கிராமம், சீன மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக திருமண புகைப்படங்களுக்கு இது பிரபலமாக உள்ளது. இங்கு உள்ள உணவு விடுதிகளில் பிரெஞ்சு உணவுகளுக்கு பதிலாக சீன உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.

இந்த கிராமம், சீனாவின் "டூபிளிடெக்சர்" (duplitecture) போக்கின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற இடங்களைப் பிரதியெடுக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது. அசல் பாரீஸ் அனுபவத்தை இந்த இடம் முழுமையாக வழங்க முடியவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.

பின்லாந்து: வாத்துகளால் நெருக்கடியில் உள்ள பிரபல சுற்றுலா இடம் - பின்னணி என்ன?

ஹைட்சுபின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கியில் அமைந்துள்ள ஹைட்சு கடற்கரை பிரபலமான கடற்கரையாகும்.ஆனால் தற்போது இந்த பிரபலமான கடற்கரை ஒரு எதிர்பாராத சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

இந்த நகரத்தில் ”இறப்பதே சட்டவிரோதம்” - வினோத விதிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

ஸ்பெயினின் கிரனாடா மாகாணத்தில் உள்ள லஞ்சரோன் என்ற சிறிய நகரத்தில், 1999ஆம் ஆண்டு முதல் மரணிப்பது "சட்டவிரோதம்" என்ற வினோதமான விதி அமலில் உள்ளது. அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ, நகரின் மயானத்தில் இடப்பற்றா... மேலும் பார்க்க

சுற்றுலா, மசாஜ் பார்லர்கள் இல்லை... தாய்லாந்தின் மிகப்பெரிய வருவாய் பற்றி தெரியுமா?

தாய்லாந்து சுற்றுலா தலங்களுக்கு பெயர்பெற்ற நாடாகும். நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்குவகித்தாலும் விவசாயம் மற்றும் ஏற்றுமதி தான் அதிக வருமானம் தரும் ஆதராமாக உள்ளது என்பது பற்றி பலரு... மேலும் பார்க்க

பாங்காங் ஏரியின் நிறங்கள்! - சிலிர்க்க வைத்த காட்சி |திசையெலாம் பனி- 9

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குற்றாலம்: ஐந்தருவி மலர் கண்காட்சி; அசரவைத்த காய்கறி குரங்கு, `வாசனைப் பொருள்' வண்ணத்துப்பூச்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது மழைக்கால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தில் சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடைப... மேலும் பார்க்க

Ooty: ஊட்டிக்கு சுற்றுலா போறீங்களா? எமரால்டு ஏரியை மறந்துடாதீங்க.. சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி இயற்கை அழகு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற ஒரு மலைவாசஸ்தலமாகும். இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி தான் சொல்லப்போகிறோம்.எமரால்டு ஏரி இந்த ஏரி, எமரால்டு க... மேலும் பார்க்க