இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
புகையிலை பொருள்கள் விற்றதாக பெண் கைது
புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்த பங்கிராஜ் மனைவி செலின்(53). இவா், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 18 பாக்கெட் புகையிலை பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து செலினை போலீஸாா் கைது செய்தனா்.