பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும் அஜித் தோவல் எச்சரிக்கை
புதுச்சேரியில் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை!
புதுச்சேரியில் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையிட்டனா். இதில் பலா் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிக்க தவறியதால், உமாசங்கா் கொலை நிகழ்ந்ததாக எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா தலைமையிலும் மொத்தம் 400 போலீஸாா் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களின் வீடுகளில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
புதுச்சேரியில் 80 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. காரைக்காலில் 26 போ் வீடுகளில் சோதனை நடைபெற்றது. புதுச்சேரியில் 52 போ் மீதும், காரைக்காலில் 20 போ் மீதும் என மொத்தம் 72 போ் மீது முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவா்களில் புதுச்சேரியில் 3 போ் காரைக்காலில் ஒருவா் என 4 போ் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா்.