செய்திகள் :

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகிறது’ - சாடும் திமுக

post image

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியரால் தமிழகத்தைச் சேர்நத கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சுற்றுலாவிற்கு பெயர்போன புதுச்சேரி மாநிலம், தற்போது ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையால் கலாசார சீரழிவு மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது.

இச்செயல் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் முகம்சுளிக்க வைக்கிறது. சுற்றுலாவை வளர்த்தெடுக்கிறோம் என்ற பெயரில் புதுச்சேரி முழுக்க புற்றீசல் போல ரெஸ்டோ பார்களை திறந்து விட்டிருக்கிறது அரசு. ஆனால் அவற்றை முறைப்படுத்தவோ கண்காணிக்கவோ பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் நிபந்தனைகள் விதிக்கவோ அரசு தவறிவிட்டது.

ரெஸ்டோ பப்
கொலை நடந்த ரெஸ்டோ பப்

இதுபற்றி ஓரிரு ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்தும், எங்களைப் போன்றவர்கள் சட்டமன்றத்தில்  எதிரொலித்தும் இந்த அரசும், காவல்துறையும் இதை கண்டுகொள்ளவில்லை.

காரணம் அரசு நிர்வாகம் ரங்கசாமியிடமும், காவல் நிர்வாகம் பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம் வசமும் இருப்பதால் அவர்களின் அரசியல் மோதல் இந்த அலட்சியப் போக்கை உருவாக்கி இருக்கிறது.

கொலை நடந்த ரெஸ்டோ பாரை மட்டும் மூடாமல், கூடுதலாக 12 ரெஸ்டோ பார்களை மூட உத்தரவிட்டதுடன், பார்களில் லஞ்சம் வாங்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் இவை அனைத்தும் அமைச்சருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், மெத்தனமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் இவர்களின் எதிர்காலமே இதனால் சிதைந்து வருகிறது. இந்த ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி கொடுப்பதைத்தான் நம் முதல்வர், சட்டமன்றத்திலும், அரசு விழாக்களிலும், பொது மேடைகளிலும் தன்னுடைய சாதனையாகக் கூறி வருகிறார்.

ரெஸ்டோ பார்களில் மது வகைகள் மட்டுமின்றி அரை நிர்வாண நடனங்களும், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பழக்கமும் நுழைக்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் இந்த கலாசார சீரழிவு, அவசர நிலை பிரகடனத்திற்கு முன்பு புழக்கத்தில் விபசார விடுதிகளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது.

இதுதான் இந்த அரசு புதுச்சேரி மக்களுக்கு செய்திருக்கின்ற சாதனையா ?  ரெஸ்டோ பார் அனுமதி பெறுபவர்கள் உள்ளூர்காரர்கள். நடத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்களாக இருக்கிறார்கள்.

முதல்வர் ரங்கசாமியுடன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

 ஒவ்வொரு பாரிலும் பவுண்சர்கள் என்று கூறும் ரவுடிகள வைத்து சுற்றுலாப் பயணிகளை அடக்கி ஆள்வதின் உச்சம்தான் இந்த கொலை. பிறமாநிலத்தவர்கள் புதுச்சேரியை கொலைகார பூமி என்று எண்ணும் நிலைக்கு இந்த அரசு தள்ளிவிட்டது.

ரெஸ்டோ பாரில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று கலால் துறை நிர்ணயித்து இருக்கின்ற அத்துனை தகுதிகளும் உள்ளனவா என்றும் நேரத்தோடு மூடப்படுகிறதா என்றும் முறையாக கண்காணிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த பகுதியில் இருக்கின்ற கலால் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கொலைக்கு முழுமையான பொறுப்பை கலால் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வரும், காவல் துறையை வைத்துள்ள உள்துறை அமைச்சர் ஆகிய இருவருமே பொறுப்பு என்று நான் குற்றம் சுமத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

`காதல் என்ன சாதியைப் பார்த்து வருவதா?' - இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்!

சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஷகிலா, "இன்ஸ்டாவில் வரக் கூடிய தராதரம் இல்லாத ஆட்கள... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: "பவுன்சர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்தது ஏன்?" - கோ.சுகுமாறன்

நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு புதுச்சேரிக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், கடந்த 9-ம் தேதி ரெஸ்டோ பார் ஊழியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்க... மேலும் பார்க்க

கூடலூர்: தொடர் கால்நடை வேட்டை; போக்கு காட்டும் புலி; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக புலி நடமாட்டம் இருப்பதை மக்கள் பார்த்து வருகின்றனர்.தேயிலைத் தோட்டங்களில்... மேலும் பார்க்க

பெங்களூரு: குடும்பத்திற்குள் குறுக்கிட்ட மாமியார்; கொன்று 19 துண்டுகளாக வெட்டி வீசிய டாக்டர் மருமகன்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள தும்குரு மாவட்டத்தில் உள்ள சிம்புகனஹள்ளி என்ற கிராமத்தில் நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த பொதும... மேலும் பார்க்க

`கணவனுக்கு கவுன்டிங் குறைவு' - வாரிசுக்காக பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குடும்பத்தினர்

குஜராத் மாநிலம் வதோதரா அருகே வசிக்கும் ரஞ்சன் (பெயர் மாற்றம்) என்பவர் மகனுக்கு திருமணமான நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் சிகிச்சை எடுத்து வந்தனர்.தற்போது ரஞ்சன் மீது, அவரது 40 வயது மருமகள்... மேலும் பார்க்க