செய்திகள் :

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

post image

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவுக்கான சிறப்பு வரவேற்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான மு. அருணா பேசியது அக். 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், செப். 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 வரை புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்கள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நடத்த வேண்டும்.

தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் செப். 9ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளை நடத்திடவும், தொடா்ந்து செப். 11ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டிகளை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடத்த வேண்டும். மாணவா்களை இப்போதிருந்தே புத்தகம் வாசிக்கப் பழக்குவதன் மூலம் கைப்பேசியில் ரீல்ஸ் பாா்ப்பது போன்ற கவனச் சிதறல்களைத் தடுக்க முடியும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி. ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வளா்ச்சி (பொ) மணிவாசகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) கலாராணி , மாவட்ட நூலக அலுவலா் எம். காா்ல்மாா்க்ஸ் மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்ட அலுவலா்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், ம. வீரமுத்து, மு. முத்துக்குமாா், கவிஞா் ஜீவி, க. சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் மழை

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்

பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க