பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!
பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06521) மறுநாள் காலை 6.15-க்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வியாழக்கிழமை (மே 1) காலை 9.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06522) இரவு 7.50-க்கு பெங்களூா் சென்றடையும். இதில், முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, 3-ஆம் வகுப்பு ஏசி வகுப்பு பெட்டிகள் 16 இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.